வரலாறு:
நாமக்கல் ஒரு தொன்மையான நகரம் மற்றும் மாவட்டம், அதன் வரலாறு பல ஆட்சியாளர்களின் கீழ் பல பரிமாணங்களை கொண்டுள்ளது.குறிப்பாக கொங்கு நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.இது விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட ஒரு முக்கிய இடமாகும்.நாமக்கல் ஒரு கோட்டையாகவும், பல ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட ஒரு பகுதியாகவும் இருந்தது.ஆறாம் நூற்றாண்டு முதல் நாமக்கல் ஒரு நாகரிகமான நகரமாக இருந்தது. இதன் பெயர் “நாமகிரி” என்ற ஒற்றைப் பாறையில் இருந்து வந்தது. இது ஊரின் மையத்தில் அமைந்துள்ளது. பழங்கால மன்னர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை பலரின் ஆட்சியில் நாமக்கல் இருந்துள்ளது. இவ்வூரின் பழைய பெயர் “ஆரைக்கல்” என்பதாகும்.
பழங்கால வரலாறு:
பல்லவ வம்சம்:
பல்லவ வம்சத்தில் திருமணம் ஆன ஆதிகுல மன்னன் குணசீலனின் ஆட்சியின் கீழ் நாமக்கல் இருந்தது.
குணசீலன்:
கி.பி 784 இல் அதியமான் மரபைச் சேர்ந்த குணசீலன், நாமக்கல் மலைக்கோட்டையில் அரங்கநாதர் மற்றும் நரசிம்மர் கோயில்களை கட்டினார்.
ஆங்கிலேயர்கள்:
1768 ல் ஆங்கிலேயர்களால் நாமக்கல் கைப்பற்றப்பட்டது.
பிரிப்பு:
1997இல் சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்கள்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சில முக்கிய ஊர்கள்: நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், குமாரபாளையம், மோகனூர் மற்றும் கொல்லிமலை ஆகிய 8 வருவாய் தாலுகாக்களை கொண்டுள்ளது. இதில் நாமக்கல் – மாவட்டத்தின் தலைமை இடமாகும், திருச்செங்கோடு – பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது, ராசிபுரம் – கோழி பண்ணைகளுக்கு பெயர் பெற்றது, பரமத்தி வேலூர் – ஒரு முக்கியமான வணிகப் பகுதியாகும், சேந்தமங்கலம் – பல கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன, குமாரபாளையம் – தொழில்துறைக்கு பெயர் பெற்றது, மோகனூர் – சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது, கொல்லிமலை – ஒரு மலையோர பகுதி ஆகும்.
சிறப்பு அம்சங்கள்:
புகழ்பெற்ற ‘நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை’ நாமக்கல் நகரத்தில் பிறந்தவராவார். இவரது நினைவாக நாமக்கல் நகரத்தில் இவரது பெயரில் மகளிருக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கால்நடை கல்லூரிகளில் ஒன்றான கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆனது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
முட்டை நகரம்:
தென் மண்டலத்தில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடத்தில் உள்ளது.நாமக்கல், முட்டை உற்பத்தியில் முன்னணியில் இருப்பதாலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அனுப்பப்படும் முட்டைகள் நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்படுவதாலும், நாமக்கல்“கோழிகள் நகரம்” என்றும் “முட்டை நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது.
நீர் ஆதாரம்:
ஜேடர்பாளையம் அணை: நாமக்கல் மாவட்டத்தில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் ஜேடர்பாளையம் அணை அமைந்துள்ளது.
மலைக்கோட்டை:
நாமக்கல் நகரில் அமைந்துள்ள மலைக்கோட்டையானது இந்நகரத்தின் சிறப்பம்சமாகும். இக்கோட்டையானது சமதளமான பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்மேற்கு திசையில் அமைந்துள்ள குறுகலான படிகளின் மூலம் இக்கோட்டையை சென்றடைய முடியும்.மலையின் மீது அமைந்துள்ள பாழடைந்த கோவிலில் வடமேற்கு மற்றும் தெற்கு சுவர்களில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் நாமக்கல் பகுதி ‘திருவரைக்கல்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோட்டை 75 மீட்டர்( 246 அடி) உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையில் ஒரு கோயிலும், மசூதியும் உள்ளன. இவை இரண்டும் நகரின் பிரபல சுற்றுலா தலங்களாக உள்ளன. மலை அடிவாரத்தில் உள்ள கமலாலயும் தொட்டியும் கோட்டையைச் சார்ந்து தொடர்புடையது. கமலாலயக்குளம் அடிவாரத்தில் இருந்தாலும் கோட்டையுடன் தொடர்புடையதாக உள்ளது. கோட்டை அந்த மலையில் இருந்து வெட்டப்பட்ட கற்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள நரசிம்மர் கோயிலும், அரங்கநாதர் கோயிலும் மலையை குடைந்து செய்யப்பட்டவை ஆகும். மலையின் கிழக்குப் பகுதியில் அரங்கநாதர் கோவிலும், மேற்கு பகுதியில் நரசிம்மர் கோவிலும் உள்ளன. இக்கோயில்கள் கிபி 784 இல் அதியமான் மரபைச் சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
சமூக அமைப்பு:
இங்குள்ள பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில் இந்து மதத்தின் ஆதிக்கத்தின் முன்பு ஜெய்ன மத துறவிகளின் உறைவிடமாக திகழ்ந்துள்ளது.
வரலாற்று சிறப்பு:
நாமக்கல் பாறை, அரங்கநாத பெருமாள் மற்றும் நரசிம்ம பெருமாள் குகை கோயில்களுக்காக அறியப்படுகிறது.
இயற்கை அழகு:
கொல்லிமலை, நாமக்கல் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கொல்லிமலை ‘கொல்லிப்பாவை’ என்றும் அழைக்கப்படும். எட்டுக்கை அம்மன் என்ற மலையை காக்கும் தெய்வத்தின் பெயரால் பெறப்பட்டது. மேலும் கொல்லிமலை 70 கொண்டை ஊசி வளைவு கொண்டது. கொண்டை ஊசி வளைவு என்பது மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் ஒழுங்கமைவு வடிவமாகும். இது பெண்களின் கொண்டையில் செருகப்படும் ஊசியின் வளைவு போல் உள்ளதால் இப்பெயர் பெற்றது.
நாமக்கல் மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் மலைப்பிரதேசமாகவும், தெற்கு பகுதிகள் சமவெளிகள் ஆகவும் காணப்படுகின்றன. இம்மாவட்டத்தின் பிரதான அருவிகளாக காவிரி ஆறு, ஐயாறு, கரிப்பொட்டான் ஆறு மற்றும் திருமணிமுத்தாறு ஆகியவை திகழ்கின்றன. நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 37 நூற்பாலைகள் உள்ளன. மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மற்றும் பல கைத்தறிகளும் இயங்கி வருகின்றன.
தொழில்கள்:
லாரிகளுக்கு கூடு கட்டும் தொழிலின் காரணமாக நாமக்கல் இந்திய வரைபடத்தில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இத்தொழில் நாமக்கல்லின் தனிச்சிறப்பு. 1960களில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு கூடு கட்டும் பட்டறைகள் மற்றும் அவற்றினை சார்ந்த பிறவகை தொழில்களும் நாமக்கல்லில் செயல்பட்டு வருகின்றன. லாரிகள், இழுவை இணைப்பு வண்டிகள் மற்றும் சமையல் எரிவாயு கொண்டு செல்லும் டேங்கர் வகை லாரிகள் போன்ற பலவகை லாரிகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. இதன் காரணமாக ‘போக்குவரத்து நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
கொல்லிமலை:
இயற்கையின் ஒரு அற்புத கொடை. 15 மலை நாடுகளை உள்ளடக்கிய இந்த மலை தொடர் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும், கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரத்திலும் வீற்றிருக்கிறது இந்த கொல்லிமலை. இந்த மலைப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்கள் இயற்கையுடன் சீரமைந்த வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள படி கொல்லிமலை சித்தர்களின் பொன் நகரமாக அறியப்படுகிறது. 18 சித்தர்களும், அவ்வையார் போன்ற அறிஞர்களும் இங்கு தவம் செய்தனர் என்று நம்பப்படுகிறது. இங்கு காணப்படும் குகைகள் சித்தர்களின் உறைவிடங்களாக பயன்பட்டது என கூறப்படுகிறது. அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் பற்றிய அறிவு ஓலைச்சுவடியில் பதிக்கப்பட்டு வந்திருக்கிறது.
மூலிகை என்றாலே கொல்லி மலையை சொல்ல வேண்டுமே…! இங்கு காணப்படும் சாவல்யகரணி, சந்தானகரணி, ஜோதி விருட்சம், அழுகுணி போன்ற மூலிகைகள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. இவை தானாகவே வளர்ந்து தானாகவே வாழும் தன்மை கொண்டது என்பதால் அவை மந்திர சக்தி வாய்ந்தவை என பலர் நம்புகின்றனர். மலைவாழ் மக்களின் நம்பிக்கை படி இந்த அறிய மூலிகைகள் மற்றும் மருந்துகளுக்கு காவலாக கொல்லிப்பாவை மற்றும் பெரியண்ணசாமி என்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள். கொல்லிமலைக்கு வரும் பயனர்கள் அனைவரும் கொல்லிப்பாவையை வணங்கியே அடுத்த பயணத்தை தொடர வேண்டும் என்பது உள்ளூர் மரபு. கிபி 200 இல் கொல்லி மலையை ஆட்சி செய்த மன்னன் வல்வில் ஓரி தமிழ் வரலாற்றின் வீரரும், வள்ளலும் ஆவார்.
இவரது ஆட்சி காலத்தில் ராசிபுரம் சிவன் கோவில் மற்றும் அறப்பளீஸ்வரர் கோவில் போன்ற சிறப்புமிக்க கோவில் கட்டிடங்கள் உருவானது. இவரின் நினைவாக இன்று கொல்லிமலையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் விழா நடத்தப்பட்டு வருகிறது. வல்வில் ஓரியின் வீர நிலை சிறிதும் குறையாதது ஆனால் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னனுடன் நடைபெற்ற போரில் நீர் கூறுமீமிசை என்ற பகுதியில் அவர் வீர மரணம் அடைந்தார். இதற்கு பின்னர் அவரின் உறவினரான அதியமான் நெடுமாஞ்சி சோழர் ஆதரவுடன் எதிரிகளை தாக்கி பழி வாங்கினார்.
இம்மலையில் 19 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 12 கல்வெட்டுகள் சோழர் ஆட்சியில் சேர்ந்தவை. காலங்கிநாதர் மூலிகை மருத்துவங்கள், நவபாஷாண சிலைகள் என பல சித்தர்கள் இங்கு மருந்துகளை தயார் செய்ததாகவும், கல்லறைகளில் பதித்து வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில ஆராய்ச்சியாளர்கள் ராமாயணத்தில் சுக்ரீவனின் ஆட்சி பகுதியான மதுவணம் கொல்லிமலையாக இருக்கலாம் எனவும் நம்புகின்றனர். இந்த மலை வெறும் பசுமை நிறைந்த சுற்றுலாத் தலமல்ல, இது சித்தர்களின் ஆன்மீக தரிசனமும் வல்வில் ஓரியின் வீர மரபும், மூலிகை மருந்துகளின் மாயையும் தாங்கி நிற்கும் தமிழரின் உயிர் நிலமாக கருதப்படுகிறது.
சுற்றுலா தலங்கள்:
நாமக்கல் மாவட்டத்தில் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. நாமக்கல் கோட்டை, கொல்லிமலை, அர்த்தநாரீஸ்வரர் கோயில், ஜேடர்பாளையம் தடுப்பணை ஆகியவை சில முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும்.
நாமக்கல் கோட்டை:
நாமக்கல் கோட்டை, இந்நகரத்தின் ஒரு சிறப்பம்சமாகும். இது வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். நாமக்கல் நகரின் முக்கிய ஈர்ப்பு நாமக்கல் கோட்டையாகும். இது ஒரு பெரிய மலைக்கோட்டை, இது ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களாக கட்டப்பட்டது.

கொல்லிமலை:
கொல்லிமலையை கடைஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி பன்னெடுங்காலம் ஆட்சி செய்துள்ளார்.கொல்லிமலை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதில் உள்ள பல இயற்கை காட்சிகள், சுற்றுலாப் பயணிகளை கவரும்.

அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்:
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.
ஜேடர்பாளையம் தடுப்பணை:
கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஜேடர்பாளையம் அணை, சுற்றுலாப் பயணிகளை கவரும் ஒரு இடமாகும்.

மற்றொரு சுற்றுலா தலங்கள்:
- நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயில்.
- நாமக்கல் நரசிம்மர் கோவில்.
- ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.
- நாகேரி அம்மன் திருக்கோயில்.
- தோட்டக்கலை தோட்டம், மூலிகை தோட்டம், படவே இல்லம், பெரியசாமி கோவில், எட்டுகை அம்மன் கோவில், அன்னாசி பழத்தோட்டங்கள், வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.
நாமக்கல்லில் உள்ள சிறப்புமிக்க கோவில்கள்:
குகை கோயில்:
நாமக்கல் மலையில் உள்ள குகைக்கோயில், பிரசித்தி பெற்ற ஒரு வழிபாட்டுத் தலமாகும்.

அர்த்தநாரீஸ்வரர் கோயில்:
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு முக்கியமான கோயிலாகும்.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டு தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றம் அளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம் – தேவ தீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது. அம்மையும், அப்பனும் கலந்ததொரு திரு உருவில் அம்மையப்பனாய் இறைவன் திருத்தலத்தில் எழுந்தருளி நிற்கும் சிறப்பு வேறு தளத்துக்கு இல்லாத ஒன்றாகும்.

அறப்பளீஸ்வரர் கோயில்:
அறப்பளீஸ்வரர் கோயில், கொல்லிமலையில் அமைந்துள்ள ஒரு பழமையான சிவன் கோவில் ஆகும். இது ஒரு தேவார வைப்புத் தலமாகும். இது ‘அறப்பள்ளி’ என்றும் அழைக்கப்படுகிறது.

கபிலமலை முருகன் கோயில்:
கபிலமலை முருகன் கோயில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற முருகன் கோயிலாகும். குழந்தை வடிவில் இத்தலத்தில் அருள்பாலிக்கும் பாலசுப்ரமணிய சுவாமி, ‘தென்றல் காற்று பரவும் குழந்தை குமாரர்’ என்று போற்றப்படுகிறார்.

ஆஞ்சநேயர் கோவில்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தனி சிறப்பு மிக்கதாக உள்ளது. உலகப் புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இக்கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் ஆகும். இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கை கூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரம் உள்ள ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. இது இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. இக்கோயில் விஷ்ணுவின் ஒரு அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லட்சுமி தேவிக்கு காட்சியளித்த இடமாக உள்ளது.

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில்:
இந்த கோயில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் அருகே உள்ளது. நயன மகரிஷி இந்த மலையில் தவம் செய்து பெருமாளை வழிபட்டதால், இந்த மலை நைனாமலை என்று பெயர் பெற்றது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகவும், பதினேழாம் நூற்றாண்டில் ராமச்சந்திர நாயக்கர் காலத்தில் கோயிலின் சில பகுதிகள் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவை அனைத்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனித்துவமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நரசிம்ம சுவாமி கோவில், அரங்கநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், அசல தீபஸ்வரர் திருக்கோயில், நாகேஸ்வரர் திருக்கோயில், எயிலிநாதர் திருக்கோயில், நாவலடி கருப்பசாமி திருக்கோயில், பழனியப்பர் திருக்கோவில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குருசாமிபாளையம், பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோவில், மாரியம்மன் திருக்கோவில் ராசிபுரம், பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்கள் உள்ளன.

