வரலாறு:
அரியலூர் மாவட்டத்தின் வரலாறு சோழர் காலத்துக்கு முற்பட்டது. சோழர்கள் ஆட்சியில் இருந்து அரியலூர் மாவட்டம், விஜயநகர பேரரசு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரை தொடர்ச்சியாக இருந்துள்ளது. இறுதியாக, 2007 இல் அரியலூர் மாவட்டம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.
சோழர் காலம்:
அரியலூர் மாவட்டம் சோழர்களின் தொடக்க காலம் முதல் இறுதி காலம் வரை சோழர் ஆட்சியில் இருந்தது. அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் பொறிக்கப்பட்ட 450 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
விஜய நகர பேரரசு:
கி.பி 1573 இல் கிருஷ்ணப்ப மழவராயர், அரியலூர் பாளையத்தின் ஆட்சியை நிறுவினார். விஜயநகர பேரரசு செஞ்சி நாயக்கர் மற்றும் ஸ்ரீரங்க – I ஆகியோரின் துணைவராக இருந்தார்.
ஆங்கிலேயர் ஆட்சி:
1801 இல், கர்நாடகம் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஜமீன்தாரி ஆனது. சுதந்திரத்திற்கு பிறகு 1950 இல் இது ஒழிக்கப்பட்டது.
தனி மாவட்டம்:
அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 23. 11. 2007 அன்று பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட தொடங்கியது.
சிறப்பம்சங்கள்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க விஷயங்களைப் பற்றி காண்போம். அரியலூர் மாவட்டத்தில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இரட்டை கோயில்கள், வைத்தியநாத சுவாமி திருக்கோயில், கார்கோடேஸ்வரர் கோயில், புத்தர் சிலைகள், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் சிற்பங்கள் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்:
மேலப்பழுவூரில் அமைந்துள்ள இந்த கோயில் ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாகும்.
இரட்டை கோயில்கள்:
அமைந்துள்ள இந்த இரட்டை கோயில்கள் ஒரு தனித்துவமான அம்சமாகும்.
வைத்தியநாத சுவாமி திருக்கோயில்:
திருமழபாடியில் உள்ள இந்த கோயில், வைத்தியநாதசுவாமியின் திருவுருவத்தைக் கொண்டுள்ளது.
கார்கோடேஸ்வரர்:
காமராசவள்ளியில் அமைந்துள்ள இந்த கோயில் ஒரு தொன்மையான கோயிலாகும்.
புத்தர் சிலைகள்:
விக்கிரமங்கலத்தில் காணப்படும் இந்த புத்தர் சிலைகள், அரியலூர் மாவட்டத்தின் வரலாற்று பன்மையை பிரதிபலிக்கின்றன.
கங்கைகொண்ட சோழபுரம்:
சோழர் காலத்தின் ஒரு முக்கிய நகரமாக இருந்த கங்கைகொண்ட சோழபுரம், அதன் வரலாற்று பன்மைகளுக்காக அறியப்படுகிறது.
சிற்பங்கள்:
கங்கைகொண்ட சோழபுரத்தில் காணப்படும் சிற்பங்கள், சோழர்கால சிற்ப கலைக்கு ஒரு சான்றாகும்.
பழங்குடியினரின் சுயமரியாதை:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் கூட்டு முயற்சியில், ஆண்டிமடம் மலைத்தொடரில் முந்திரி தோட்டத்தில் அறுவடை செய்யும் உரிமையை பெற்று முந்திரி சேகரிப்பு மற்றும் விற்பனையில் சிறந்து விளங்குகின்றனர்.
தொல்லுயிர் விலங்கியல் பூங்கா:
அரியலூர் மாவட்டம் ஒரு
தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாக திகழ்வதுடன், ‘ புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது.
வேட்டக்குடி கரையவெட்டி பறவைகள் சரணாலயம்:
இது பறவைகளை விரும்புகிறவர்களுக்கு ஒரு நல்ல இடமாகும்.
பொருளாதாரம்:
இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமென்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி( Cement city) என்றும் அழைக்கப்படுகிறது. சிமெண்ட் தவிர நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிக அளவில் படிமங்களாக கிடைக்கிறது. இதனை அடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அனல் மின் நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இது தவிர இம்மாட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரி அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
புவியியல்:
- மாவட்டத்தின் மூன்று முக்கிய நதிகளாவான: கொள்ளிடம், மருதையாறு, வெள்ளாறு.
- கூட்டத்தின் மூன்று முக்கிய நகரங்கள்: அரியலூர், உடையார் பாளையம், ஜெயங்கொண்டம்.
உணவு முறை:
அரியலூர் மாவட்டத்தில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இம்மாவட்டத்தில் கிடைக்கும் அரிசி, பருப்பு, காய்கறிகள், மற்றும் பாரம்பரிய உணவு முறைகள் ஆகியவை சிறப்பு உணவு வகைகளாகும். இம்மாவட்டத்தில் கிடைக்கும் பிரியாணி, குழம்பு, சாம்பார், பொரியல் போன்ற உணவுகள் அரியலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றவை.
பனை மரங்கள்:
அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் பனை மரங்கள் காணப்படுகின்றன. இது ஒரு தனித்துவமான அம்சமாகும்.
சுற்றுலா தலங்கள்:
அரியலூர் மாவட்டத்தில் காணப்படும் சிறப்புமிக்க சுற்றுலா தலங்களை பற்றி காண்போம். அரியலூர் மாவட்டத்தில், சுற்றுலாவிற்கு நல்ல இடங்கள் நிறைய இருக்கு. அவை கங்கைகொண்ட சோழபுரம், வேட்டக்குடி பறவைகள் சரணாலயம், இரட்டை கோயில்கள், வைத்தியநாதசுவாமி கோயில் போன்றவை முக்கிய இடங்கள். அரியலூர் மாவட்டத்தில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கோவில்கள் பல உள்ளன.
கங்கைகொண்ட சோழபுரம்:
முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில். அரியலூர் பகுதியில் மிகச் சிறந்த ஒன்றாகும்.
காமரசவல்லி:
கார்கோடேஸ்வரர் கோவில் இங்கு உள்ளது. இதுவும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.

சிமெண்ட் தொழிற்சாலைகள்:
அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இது ஒரு தொழில் சார்ந்த சுற்றுலா தலமாகவும் பார்க்கப்படுகிறது.
சிறப்புமிக்க கோவில்கள்:
தமிழகமே கோயில்களுக்கும் ஆன்மீகத்திற்கும் பெயர் பெற்றது. அப்படியாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சிறப்பம்சம் வாய்ந்த பல புராணங்கள் நிறைந்த அனைத்து தோஷங்களுக்கும் அனைத்து துன்பங்களுக்கும் தீர்வு கொடுக்கக் கூடிய கோவிலாக அமைந்திருக்கும். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த முக்கிய கோயில்கள் பற்றி பார்ப்போம்.
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் – திருமழபாடி:
இக்கோயிலில் முக்கிய சிறப்பு என்னவென்றால் நந்தி பகவானுக்கு இக்கோயில்தான் திருமணம் நடந்தது. திருமணம் தடைபட்டு கொண்டு இருப்பவர்கள், திருமணம் தாமதம் இவர்கள் எல்லாம் இங்கு பங்குனி புனர்பூசம் அன்று நடைபெறும் நந்தி திருமணம் பார்க்க அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள இறைவன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் விநாயகரின் திருநாமம் சுந்தர விநாயகர் ஆகும். அடுத்ததாக பாலாம்பிகை, சுந்தராம்பிகை இவர்களுக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.
இங்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஒரே கல்லால் ஆன சோமஸ்கந்தர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். அடுத்தபடியாக சிவன் சந்நிதியில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் இருக்கின்றனர். பிறகு கார்த்தியாயணி அம்மன் சன்னதியும் இருக்கிறது. இங்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால் அப்பர், சம்பந்தர், சுந்தரர் அவர்கள் மூவராலும் பாடல் பெற்ற சிறப்பு தலமாகும்.

அருள்மிகு ஆலந்துரையார் திருக்கோயில் – கீழப்பழுவூர்:
இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் மிக சிறியதாக இருப்பதால் அதனை அடையாளம் காட்ட லிங்கம் மேல் குவளை தவிர்க்கப்பட்டு இருக்கும். அபிஷேகம் நடைபெறும் பொழுது அந்த குவளைக்கே அபிஷேகம் நடைபெறும். மேலும் இங்குள்ள சிவனுக்கு சாம்பிராணி தைலம் பூசப்படுகிறது. இங்கு விநாயகப் பெருமான் நடனம் ஆடும் கோலமும், பஞ்சலோக சிலையும் சற்று வித்தியாசமானவை. இங்கு கிழக்கு நோக்கிய ஐந்து ராஜகோபுரங்களுடன் இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றன.

அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோவில் – உடையவர் தீயனூர்:
இங்கு மூலவர் ஜமதக்னீஸ்வரர் கருங்கல்லால் ஆன சதுர வடிவில் அமைந்த பலகை போன்ற பீடத்தின் மேல் சிவலிங்க திருமேனியராக காட்சி கொடுக்கிறார். இக்கோயில் 1166 இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். பூரண காலத்தில் இங்கு வில்வ மரங்கள் அதிகம் காணப்பட்டு உள்ளதால் இந்த இடத்திற்கு வில்வாரண்யம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் – கங்கைகொண்ட சோழபுரம்:
தமிழ்நாட்டில் மிகப் பெரிய சிவலிங்கம் அமைந்துள்ள கோயில் தான் இந்த பிரகதீஸ்வரர் கோயில். இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற புகழ்வாய்ந்த கோயில். தினமும் பகலில் இக்கோயிலில் உள்ள நந்தியின் மீது சூரிய ஒளி வீசி அந்த ஒளி சிவலிங்கத்தின் மீது படுவது சிறப்பம்சமாகும். அப்படியாக நாம் மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை எல்லாம் அனைத்து விட்டு அந்த சூரிய வெளிச்சம் கொண்டு சிவலிங்கம் பார்க்க அத்தனை அழகாக இருக்கும் வடிவில் லிங்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், குளிர்காலத்தில் குளிரை குறைத்து வெப்பத்தையும், வெப்ப காலங்களில் வெப்பத்தை குறைத்து குளிர் கொடுப்பதாக அமையப்பெற்று இருப்பது தான். இங்கு பெரியநாயகி அம்மன் 9.5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு கலியுகவரதராஜா பெருமாள் திருக்கோயில் – கல்லங்குறிச்சி:
இங்கு மூலஸ்தானத்தில் 12 உயரத்திலான கம்பத்தை தாங்கிக் கொண்டு இருப்பது போல ஆஞ்சநேயர் உருவம் மட்டுமே உள்ளது. இவரையே மூலவராக கருதி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. இவரை தவிர்த்து இங்கு வேறு சிலைகள் எதுவும் இல்லை. மேலும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பதும் இல்லை. மாறாக உற்சவர் மூர்த்தி புறப்பாடு இருக்கிறது. மேலும் தாயாருக்கும் தனி சன்னதிகள் கிடையாது. மூலவரே கம்பத்தில் இருப்பதால் தாயாரும் உடன் இருப்பதாக ஐதீகம். பிறகு, உற்சவர் கலியுக வரதராஜ பெருமாளாக ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் கார்கோடேஸ்வரர் – கமரசவல்லி, ஜெயங்கொண்ட வரதராஜ பெருமாள் கோவில்,கோவிந்த புத்தூர் – கங்க ஜெகதீஸ்வரர் கோவில், கோதண்ட ராமசாமி கோவில் மற்றும் பல சிவன் கோவில்கள் உள்ளன.
